விதி

ஆ! கோர விபத்து!
அந்தச் சாலையில்!

துடிதுடித்து சாகிறான்
அங்கே ஒருவன்!

"எல்லாம் தலைவிதி
படிதான் நடக்கும்"
ஓர் சோக குரல்!

"ஐயோ! சாலைவிதி
படி நடந்திருந்தால்
நான் உயிரோடு
இருந்திருப்பேனே"!
ஆயிரமாயிரம்
கனவுகளையும்,கடமைகளையும்
சுமந்திருந்த அவன்
ஆன்மாவின் கதறல்!

எழுதியவர் : அனுசுயா (25-Sep-15, 11:43 pm)
பார்வை : 114

மேலே