உன் நினைப்போ

குடம் நீரில் குளித்தாலும்
கடல் நீராய் முத்துபோல்
சிப்பி போலே உன் நினைவால்
தப்பி என்னுள் திறக்கிறதே

பெண்மை என்று நானிருந்தேன்
ஆண்மைகொண்டு சாய்த்துவிட்டாய்
மஞ்சள் பூசி குளித்தாலும்
மச்சான் நினைப்பால் சிவக்கிறேதே

கொஞ்சல் பேச்சில் குடிவந்தாய்
குத்தகையாக முத்தம் தந்தாய்
காலியில்லை இதயத்திலே
காதலனாய் நீ இருப்பாய்

கிள்ளி பார்த்தேன் என்னவனே
கிட்ட இல்லை நீ தூரம்தான்
துள்ளி துள்ளி உன்னை சுற்றியே
தூக்கி கொல்லுது என் மனது

தள்ளி போன பிரிவு இல்லை
கள்ளி காய்ச்ச விதையேயில்லை
சொல்லி வைச்சேன் என்னவனே
சொந்தமாவாய் எனக்கு எப்போ நீ ?



எழுதியவர் : . ' .கவி (30-May-11, 9:34 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 413

மேலே