காதலிக்க காத்திருப்பு

சுவாசம் சுவாசம் நீயாக
சொல்லிவருவது காதலல்ல
கண்ணை கட்டி போடத்தானே
இமைகள் இழுத்து அடைத்தாலும்
விழியோரம் நானிருக்க
வெளுத்து போகுது உன் நடிப்பு

சிரிக்குது சிரிக்குது உன்னுதடு
சிவக்க பாக்குது உன் கன்னம்
மறைக்க பார்க்கும் மேகத்திலே
கரைக்க பார்க்கும் காற்றாலே
இரவு வரும் வெண்ணிலவே
என்னவளே அதில் நீயிருக்க

அந்தி வானம் நீளுதே
அன்பில் கானம் தள்ளுதே
முந்தி வரும் உன் வழியில்
மூடி வைத்தேன் என் வழியை
தேடி வந்து திறந்து விடு
சோடியாக நாம் விரைந்துவிடு


எழுதியவர் : . ' .கவி (30-May-11, 9:27 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 373

மேலே