காதல் நடிப்பு
நான் போட்ட நாடகத்தில்
நானேதான் நடிக்கிறேன்
காதலிக்கவே மாட்டேனென்று
காட்சிக்கு காட்சி மாறுறேன்
தோளை தொட்டு அவளிருக்க
தூக்கி கொள்ளும் கைகளில்
கெண்டை மீனாய் துடிக்கிறாள்
கேலி பேசி நடிக்கின்றேன்
மாசத்துக்கு முப்பதுநாள்
வாசத்துக்கு மல்லிகையாய்
பாசத்துக்காய் உன் கூந்தலில்
சுவாசம் பட்டு சொல்லும் போது
காலை எழுதும் கவிதைக்கு
கனவு வரிகள் பூத்திருக்க
வலிப்பது போல் சிரிப்பதுதான்
வாழ்வது போல் நடிப்பது