துறவு கலைந்தவன்
நந்தவன மேடையில் நர்த்தனமாடும் பொன்வண்டே
சந்தனமாலை சரம் தொடுக்கிறேன் உன்னைக்கண்டே
உதிர்ந்த பூக்கள்கொண்டு பாய் விரித்தேன்
முதிர்ந்த பழங்கள்கொண்டு அலங்கரித்தேன்
விரிந்த விரல்கள்கொண்டு சொடுக்கெடுத்தேன்
சரிந்த புடவைகொண்டு தலை துடைத்தேன்
குனிந்த வாழைப்போல உன்னை வளைத்தேன்
பணிந்த ஏழைப்போல உன்னை பணித்தேன்
பழுத்த புலவன் போல உன்னை புகழ்ந்தேன்
கொழுத்த பசுவைப்போல உன்னை கரந்தேன்
சிறந்த சிற்பியாக சிலை வடித்தேன்
உயந்த கற்பியாக கலை படித்தேன்
தெளிந்த முனிவனாக முயற்சித்தேன் - அது
முடியாமல் போகவே மோகத்தை ரட்சித்தேன்
பரந்த உள்ளத்தில் உனக்கு இடமளிதேன்
பறந்து வந்து நீ எனக்கு இதமளித்தாய்
அறுந்து போகாத உறவு அமைப்போம் – தினம்
விருந்து உண்டு சுகம் சமைப்போம் !