எல்லாம் நலம் பெற ஒரே வழி
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு கடமை, பொறுப்பு
அப்போது மட்டுமே
அவரவர்க்கு உரிமை.
ஒன்றை கொடுத்துத்தான்
ஒன்றை பெற முடியும்
என்பதை அறியாத
வெகுஜனம் மட்டுமே
இலவசத்தையும் இலவச இணைப்பையும்
எதிர்பார்த்துக்கொண்டே இருக்கும்.
குடி உயர கோன் உயர
குலம் உயர
குல தெய்வத்திற்கே
தொடர் சிறப்பு.
தலைமுறை
தலைமுறையாக
பழக்க வழக்கம் பண்பாடு
கலாச்சாரம் குல கௌரவம்
வெட்டிபேச்சோ வீண் ஜம்பமோ
அல்ல
விழுதுகள் சில விசனப்படுவது போல.
எங்கள்
குல தெய்வத்திற்கு
கோபம் வந்து விடும்...
வருடம்
ஒருமுறையாவது
அதற்கு செய்ய வேண்டிய
மரியாதையை
அனைவருடனும்
சேர்ந்து முறையாக
தவறாமல்
செய்யா விட்டால்...
எங்கள்
குல தெய்வம்
ஓன்றும் கோபித்ததில்லை.....
மருந்துக்கும்
மாசக் கடைசிக்கும்
புஸ்தகம் வாங்கவும்
புதுத்துணி வாங்கவும் என
இடையிலேயே அதன்
உண்டியல் உடைபடுவதைக் கண்டும்......!
பொருள் ஆதாரம் தான்,
பொருள் வரும் வழி யாவும்
அவன் தந்தால் தான்,
அவனை நினைத்தால் தான்
அருள் நிலைத்தால் தான்
எதுவும் ஆகாது சேதாரம்..
பொருளாதாரத்திற்கே
ஆதாரம் தெய்வம் தான்,