தோழி

ஆராரோ பாடாத என் தாயே

அம்மம்மா சொல்லாத உன் பிள்ளை நான்

வஞ்சனைகள் தீண்டாத

உன் கைகளின் அரவணைப்பில்

தாயின் கை இடுக்கில் தஞ்சம் கொண்ட

குழந்தையை-போல்

ஆனந்தமாய் வாழ்கின்றேன்...

நான் கலங்கும் போழுதெல்லாம்

கண்ணீர் துடைப்பவளே...

நான் வாடிய போழுதெல்லாம்

வசந்தம் பொழிந்தவளே...

வேலியிட்ட முள்காட்டில்

வேதனைகள் திராமால்

உழைத்துச் சிந்திய வேர்வையை

பொன் மழையாய் பொழிந்தவளே...

தோல் மீது சுமராம இருந்தாலேன்ன

அடியேன் பாரம் சுமந்தாயே...

சோதனைகளால் பல நேர்ந்து

சிந்திய கண்ணீர் துளிகளில்

உன் கனவுகள் கழுவி

என் கனவுகளுக்கு வெளிச்சம் தந்தவளே...

போதிப்பவன் எல்லாம் ஆசான் ஆயின்

என் தோழியே நீ

வேதங்கள் போதித்து...

சாதி,மதங்கள் பாராதே...

ஈகை கொள் என்றாயே...

நான் கால் போன போக்கில் சென்றபோது

காடு வழி தடுத்து

வீடு வழி செல்ல வழிகாட்டினாயே…

நான் துவண்டு விழும்போதெல்லாம்

தோல் தட்டி கொடுத்தவளே…

ஆதவன் வந்துவிட்டான் என்று

கார் இருள் நீக்கிய சந்திரனை மறப்பதில்லையே!...

மனையாள் வந்தால் மாதவியை மறப்பதா?...

மறவேன் தோழி ஒருபோதும்

மறந்தால் மண்டியிடுவேன்

உன் பாதை சுவடுகளில்-மீண்டும்

மன்னிப்பாள் என் தோழி...

-அ.பெரியண்ணன்

எழுதியவர் : அ.பெரியண்ணன் (28-Sep-15, 12:01 am)
Tanglish : thozhi
பார்வை : 243

மேலே