தொடருமாஆஆஆஆஆஆஆ சொல் ம்ம்ம்

தொடருமாஆஆஆஆஆஆஆ சொல் ம்ம்ம்
=====================================

நீ துப்பி துப்பி சேர்ந்த என் குறைகள்தான்
அந்த எச்சில் மடுவில்
கவிதையாகி இருக்கின்றன
நீ நேசித்தபோது ம்ம்ம்,,,,,,,
நெகிழிக்குவளை விழுந்ததைக்கூட
கவனியாத சிறுவனைப்போல்
என் கால்கள் பதியமிடத்தொடங்கின
கட்டைவிரல் பட்ட இடந்தோறும்
நீ புள்ளியிட மறந்தவை
மெய்யெழுத்துகளாகி அர்த்தப் படுகின்றன ,,,,,,,,,,,,,,
நீ போதாது என்றுசொல்லும் புகார்களை
நான் பூர்த்தி செய்ததே இல்லை ம்ம்
அட்டவணையின் நீளம் பெருகி
எஞ்சியிருக்கும் உன் புகார்களினாலாவது
நரைக்க ஓரைப்பார்க்கும்
என் மீசையும் காதோர ரோமங்களும்
கருப்புறுதலில்
ஒரு மீள் ஜென்மம் அடையட்டும்,,,,
உன் நுனிநாவின் உவர்ப்பு
இதழ்களால் தோல்எழுப்பிய புண்களில்
உப்பு வார்க்கிறது
உன் தாகத்தின் தவநீட்சியை உணர்த்தி ம்ம்ம்
நிறக்கன்னமிடும் திசுக்களால்
என் திசுக்களில்
கோடுமுறியச்செய்கிறாய்
இன்னுமான சட்டை ஊரலுக்கு
காற்று சேகரிப்பு பஞ்சமே இல்லை ம்ம்ம்,,,,,
என் சட்டை
பொத்தான்களை
நீ அவிழ்த்துத்தீரும் முன்னமே
இதோ ஒரு கடிதம் தயார் செய்துவிட்டேன் ம்ம்ம்
உன் முகத்தை
கைகளால் மூடிக்கொள்ளாதே
முகத்தோடு
முகமொற்றிக்கொள்ளும்போது
என் கடிதங்களின்
பழையவாடை மாறவில்லை
இடையில்
உனக்குள்ளாகிவிட்ட என் ஜீவபறியந்தம்
கல்லறைவரைத் தொடருமாஆஆஆஆஆஆஆ சொல் ம்ம்ம்,,,,,,,

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (28-Sep-15, 2:49 am)
பார்வை : 93

மேலே