கருவறை
நாணம் இல்லை
ஆசை இல்லை
கனவு இல்லை
கற்பனை இல்லை
உணவு இல்லை
பசி இல்லை
ஒளி இல்லை
அச்சம் இல்லை
சுற்றம் இல்லை
சுயநலம் இல்லை
வஞ்சகம் இல்லை
வலிகள் இல்லை
சாதிகள் இல்லை
சதிகள் இல்லை
பழி இல்லை
பகை இல்லை
அன்னையின் கருவறைக்குள் ஆனந்தமாய் நானிருந்த
பத்து மாதம்
மீண்டும் வருமா?