நான் யார்

நான் கவிஞன் இல்லை...
ஆனால் எண்ணங்களில் வயல் அமைத்து
எழுத்துக்களை விதைக்கத்தெரியும்...!

நான் கவிஞன் இல்லை...
ஆனாலும் விதைத்த எழுத்துக்களை
சொல் நாற்றாய் வளர்க்கத்தெரியும்...!

நான் கவிஞன் இல்லை...
அந்தச் சொல்நாற்றுகளை வரிகளாய்ப்
பயிராக்கத்தெரியும்...!

நான் கவிஞன் இல்லை...
ஆனாலும் அந்தப் பயிர்வரிகளில்
கருத்தெனும் கதிர்களை காடசிப்படுத்தத் தெரியும்...!

இப்பொழுது சொல்லுங்கள்...
எனக்குத்தொழில் கவிதையா
அல்லது விவசாயமா என்று..?

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (28-Sep-15, 9:36 pm)
Tanglish : naan yaar
பார்வை : 610

மேலே