அவன் கவிஞன்
அல்லிக்குத் தெரியாது நிலா
அந்த உண்மை
அறியாதவரை கவிஞன்.
*
தேயாது சந்திரன் என்பது
தெரியும்வரை கவிஞன்
*
பால் நிலவு கோளமென
படிக்காதவரை கவிஞன்
*
பனி பொழிவது திங்களல்ல
இதைப்
படித்தறியும்வரை கவிஞன்
*
பிறை என்பது பெயர்
என்று
புரியும்வரை கவிஞன்
*