இயற்கை மாசுபாடு ---- ஆசிரியத் தாழிசை

இயற்கை அளித்த இன்பச் சூழலை
செயற்கை தன்னை செயலில் புகுத்திட
உயர்வை உலகிலே உணர முடியுமோ ?


காற்றின் வாசம் கழிவின் செயலே .
ஆற்றின் நிறமே அகன்றதோர் நீரினில்
சேற்றில் நெல்லும் செழிக்க முடியுமோ ?


நஞ்சு கலந்திடும் நாசம் விளைத்திடும் .
பஞ்சம் மிகுந்திடும் பசியால் வாடிடும்
தஞ்சம் யாரும் தந்திடல் முடியுமோ ?

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Sep-15, 10:01 pm)
பார்வை : 324

மேலே