இக்கால ஜாடி குழந்தைப் பாட்டு 2

...............................................................................................................................................................................................

தாகம் கொண்ட காகம் ரெண்டு
தண்ணீர் தேடி அலைந்தனவாம்..
போகும் வழியில் ஜாடியொன்றில் .
சிறிதே தண்ணீர் கண்டனவாம்..

பள்ளியில் படித்த காகமொன்று
பற்பல கற்கள் தேடியதாம்..
பக்குவப்பட்ட காகம் கண்டு
பள்ளம் பறிக்க முனைந்ததுவாம்..

கல்லைத் தூக்கி தூக்கி இட
தண்ணீர் மேலே எழும்பியதாம்..
தட்டிய கல்லின் கனத்தாலே
சட்டென விரிசல் கண்டதுவாம்..!

ஓடிய தண்ணீர் பள்ளத்தில்
ஒரு சில நிமிடம் நின்றதுவாம்..
ஏடுதராத கல்வியிது
என்றது அனுபவக் காக்கையங்கு..

முற்றும் தண்ணீர் வற்றுமுன்னே
முழுதும் குடித்த திருப்தியிலே
கற்றை சிறகுகள் கோதினவாம்..
களிப்புடன் உயரே பறந்தனவாம்..!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (29-Sep-15, 12:20 pm)
பார்வை : 122

மேலே