அழகான கொடி
திரை ரசனை மோகம்
கண்ணை மறைக்க
இந்திப் பெயர் மோகம்
நெஞ்சைத் துளைக்க
காலத்தோடு ஒட்ட ஒழுகி,
படமொன்றில் நடித்த நாயகியின்
சாருலதா என்ற இந்திப் பெயரை
தவமிருந்து பெற்ற என் அருமை மகளின்
பெயராகச் சூட்டிப் பேரானந்தம் கொண்டேன்
தமிழ்ப் பெயரைச் சூட்ட வெட்கப்பட்டதால்.
பெயரின் பொருள் அறியாமலே
பெயர் வைத்தேன்
நான் பெற்ற என் செல்ல மகளுக்கு.
சாருலதா என்றால்
'அழகான கொடி'யாம்.
இன்று தான் சொன்னார்
என் இனிய நண்பர் ஒருவர்.
வெட்கப்படுகிறேன் இப்பொழுது
செம்மொழியாம் நந்தமிழில்
இல்லாத அழகான பெயர்களா
ஆயிரதது நானூறு ஆண்டுகளே ஆன
இன்னும் முதிர்ச்சியும் வளர்ச்சியும்
எட்டாத இந்தி மொழியில் இருந்திடக்கூடும்?
திருந்தினேன் வருந்துகிறேன்
இனியென் அன்பு மகளை
மலர்விழி என்றழைத்தே மகிழ்வேன்