திருமணமான ஆண் ஒரு பெண்ணுடன் கொண்ட நட்பு
( திருமணமான ஆண் ஒரு பெண்ணுடன் கொண்ட ) நட்பு
என்னை ஈன்றெடுத்த
நாள்முதல் இன்றுவரை
என் அன்னையவள்
இதயத்தின் இரணங்களை
வெளிப்படுத்த தவறியது – இவன்
தன் மகன் என்றோ ?..........
முதிர்க்கன்னியாய் வாழும்
மூத்த சகோதரியவள்
மனக் குமுறல்களை
வெளிப்படுத்த தவறியது – இவன்
தன் இளையவன் என்றோ ?.........
நித்தம் அடக்கம் கொண்ட
இளைய சகோதரியவள்
முழுச் சுதந்திரத்தை
வெளிப்படுத்த தவறியது – இவன்
தன் மூத்தவன் என்றோ ?........
வாழ்வனைத்தும் உனக்கென்று
பசிபோக்கி படுக்கை
விரித்த பத்தினியவள்
தன் இச்சையை
வெளிப்படுத்த தவறியது – இவன்
தன் உத்தமன் என்றோ ?........
இருப்பினும் இவ்வனைத்து
பந்தங்களின் உணர்வுகள்
அறிந்தவன் இவன் – உன்
உன்னத நட்பின் மூலமாக
என் தோழி !.........
என்
அன்புத் தோழியே – என்
வாழ்வுதனில் மோகத்தையும்
காமத்தையும் வென்றவனாவேன் – ஆகையால்
உன் தோழமை பெற்றதில் நான்
கோப்பெருஞ்சோழன் ஆவேன் !!..........
- தஞ்சை குணா (எ) குணசேகரன்