மாற்றமா

என் தலையனைக்கு
அடியில் காதல்
முளைத்து இருக்கிறது
என் பேனாவிற்க்கும்
கவிதை தெரிகிறது

கண்கள் அழுகின்ற
சுகம் தேடுகிறது
கால்கள்
காற்றில் கலந்துவிட்டது

என்னை மாற்றியது
மாற்றமா??
அல்லது
என்னவளா??

எழுதியவர் : தமிழ்நேயன் ஏழுமலை (29-Sep-15, 7:47 pm)
பார்வை : 64

மேலே