மரியாதைக்குரிய வெண்பா

காதலும் கவிதையும் ஓருருவாய் நிற்பவள் பெண்
காதலின் தீபம் கண்ணிலும் கவிதையின் புத்தகம் நெஞ்சிலும்
ஏந்தி காலெடுத்து நடந்து வர அவளை கைபிடிக்கும்
இரு மனம் இணையும் ஒரு மணம் திருமணம் .

------இராசேந்திரனின் கருத்தில் சொன்ன வரிகள்
பட்டமளித்திருக்கிறார் .அந்த மரியாதையைக் காப்பாறிக்
கொள்ள நான் எழுதிய பல விகற்ப இன்னிசை வெண்பா .

காதல் கவிதையுடன் ஓருருவாய் நிற்பவள்பெண்
காதலின் தீபமோ கண்ணில் கவிதையோ
நெஞ்சினி லேந்தி வருமவளை கைபிடிக்கும்
நல்லிரும னம்சேர்த்தல் வாழ்வு .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Sep-15, 7:24 pm)
பார்வை : 362

மேலே