காலை வணக்கம்
காலை வணக்கம்
அதிகாலையில்
கொக்கரிக்கும் சேவல்
குரல் சொல்கிறது – சுற்றி
அனைவருக்கும் தன்
காலை வணக்கம்.
அந்தியில் உறங்கி
அதிகாலையில் பசு
“மா” சொல்கிறது – தன்
கன்றுவிர்க்கு அதன்
காலை வணக்கம்.
இரவுகள் விடை பெற
பகலவன் மேலெழும்பினான்
உலகிற்க்கு சொல்ல
காலை வணக்கம்.
தின உழைப்பில்
கலைத்துப் போனவள் – என்
அன்னை சொன்னாள் – தினம்
காலை வணக்கம்.
தவ வாழ்வுதனில் – என்னைத்
தவழசெய்த தந்தை
அனுதினமும் சொன்னார்
காலை வணக்கம்.
இன்று
உன் கார்கூந்தல் வருடி – தான்
திலகமிட்ட நெற்றிதனில்
முத்தமிட்ட இவன்
பார்வைதனில் உணர்வாய்
இந்நாள் நன்னாளாய்
விளங்க காலை வணக்கம்.