காதலித்து பட்டம் பெற்றேன்

உன்னை நான் காதலித்து
அளவில்லா ஆனந்தம் அடைந்தேனோ தெரியாது
அதிகளவில் பட்டம் பெற்றேன்
அதுவும் என் விருப்பம் இல்லாமலேயே
அன்று ஏதொ உலகையே வென்றது போலிருந்த்து
இன்று ஏனோ உலகையே வெறுக்கிறேன்
நண்பர்கள் தந்த பட்டம் “பைத்தியம்”
உறவினர்கள் தந்த பட்டம் “படித்த முட்டாள்”
பெற்றோர்கள் தந்த பட்டம் “நம்பிக்கை துரோகி”
சுற்றம் தந்தது “ஒழுங்கீனம்” எனும் பட்டம்
எல்லாம் இப்படி இருக்க ஒன்றாய் வாழ முடிவெடுத்தால்
மீண்டும் ஒரு பட்டம் ……”ஓடிப்போனவர்கள்”?!

எழுதியவர் : ராஜஸ்ரீ (30-Sep-15, 4:03 pm)
சேர்த்தது : ராஜஸ்ரீ
பார்வை : 100

புதிய படைப்புகள்

மேலே