இதுதான் என் தீர்ப்பு,,,,,

அன்பாய் இரு,
பறவையை அடைத்து வைத்து,
பாசத்துடன் தீனிப்போட்டு செல்லப்பிராணி என்காதே,

உன் செல்லப்பிராணிக்கு செல்லம் என்பது
வானில் பறப்பதே தவிர
வலைக்கூண்டில் கிடப்பதே அல்ல,

பறவைகள் பறக்க பிறந்தது அதை பறக்கவிடு,

கீச்கீச் என்று கத்துக்கிறதே அதுவெல்லாம் பேசிக்கொள்கிறாதா என்ன?

அதுயெல்லாம் அடி தொண்டையின் அழுகைகள்,

வானமே எல்லைதான் அதற்கு வந்தே மாதரம்,

மனிதர்களே,

சிறைக்காவலனாய் வேலைப் பார்த்து போதும்,

நிபத்தனையற்ற விடுதலையென நான் தீர்ப்பு எழுதுகிறேன்,

விடுதலை செய்யுங்கள்,

இல்லை,

நீங்கள் விடுதலை செய்யும் வரை,
நான் தீர்ப்பு எழுதிக் கொண்டேதான் இருப்பேன்,

இதுதான் என் தீர்ப்பு,,,,,,

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (1-Oct-15, 10:34 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 72

மேலே