மயங்கி விழுந்தேன்

நீ என்னைப் பார்ப்பதாக
எனக்கு தோன்றவே
என்னை என்னாலேயே
நம்ப முடியவில்லை!
வானத்தில்
இறக்கையின்றி பறந்தேன்!
பிறகு உன் தோழி வந்தாள்!
உன்னை எதற்கோ கேலி செய்தாள்!
உனக்கு மாறுகண்ணாம்!!!
அப்படியென்றால்
என்னை நீ
பார்க்கவே இல்லையா?
இப்போது
மயங்கி
மல்லாக்க விழுந்தேன்!