இப்படியொரு ஆசையடி

கண்பறித்து குலுங்கி நிற்கும் சோலையில்
பெண்பறிக்க சினுங்கி நிற்கும் பூக்களாகவோ
மனக்கொடியினை தூசிதட்டி வீசும் மணக்கும் செடியாகவோ
இருந்திட ஆசையில்லை ...!!!

வண்ணம் பலகொண்டு எண்ணக்கிளர்ச்சி
நடத்தும் வானிலை உணர்த்தி மனநிலை சிலிர்க்க
மழையினில் கலையாட்டம் ஆடும் அழகுமயிலாகவோ
இருந்திட ஆசையில்லை ...!!!

இன்னிசையினை வென்றெடுக்கும் வனத்திலும்
எம்மனதிலும் ராகம் படைத்து சோகம்களைந்து
மனமேகதினுள் நுழைந்து மோகபாட்டுபாடும் குயிலாகவோ
இருந்திட ஆசையில்லை ...!!!

சாகாவரம்பெற்று குமரிபோல துள்ளியோடி
தன்னோரம் ஆனந்தமாயமர்ந்திருக்கும் செடிகொடிகட்கு
அர்ப்பணமாகவும் அர்ச்சனையாகவும் திகழும் நதியாகவோ
இருந்திட ஆசையில்லை ...!!!

மேகம் மழையாக வந்து நனைக்கும் பயிர்களிலும்
உயிர்களிலும் சிறந்த உன்னழகிய மார்பினில் தவழும்
தாவணியில் ஆங்காங்கே சிதறிகிடக்கும் சரிகையாக
இருந்திடவே மனம் துடிக்குமடி ...!!!

எழுதியவர் : அர்ஷத் (2-Oct-15, 7:25 am)
பார்வை : 463

மேலே