காதல் கசிந்துருக
சிவப்புரோஜா ரத்தத்தில் குளித்ததோ உன் உதடாக,
கார்மேகம் உடல் மெலிந்ததோ உன் புருவமாக,
வசீகரத்தில் வல்லமை பெற்ற உணர்வு உன்சிரிப்பாக,
இவையனைத்தும் எனை மயக்கும் பனைமரத்து கள்ளாக,
என் உணர்ச்சிகளை சேர்த்து எடுத்தேன் காதலாக,
உனையே அழகே பரிசளித்தாய் என் நேசத்துக்காக,
உன்தோள் சாய்ந்தேன் நான் என்வாழ்வே நீயாக,
அணைத்த படியே அன்பைச் சொல்லி நின்றாய்,
என் கன்னம் நனைத்த,
உன் கண்ணீர் துளியாக!!!!!!!!!
-g.k