அண்ணல் பிறந்தார்

அவர் குழந்தை போல் சிரிக்கும்
முகம் கொண்டவர்...
சத்தியாகிரகம் என்ற சக்தி கொண்டு
உலகம் வென்றவர்...
அண்ணல் காந்தி இன்று வரை
எல்லோர் நினைவிலும் இருக்கிறார் என்றார்
ஒன்று
அவர் ரூபாய் தாளில் இருப்பதால் தான்...
இரண்டு
அவர் பிறந்த நாளன்று விடுமுறை...
மூன்று
மிக முக்கியமானது..
இன்று எல்லா மதுக்கடைகளுக்கும் விடுமுறை...
இல்லையெனில் அவரை
என்றோ மறந்திருப்போம்...