அறுபதாம் திருமண நாள் வாழ்த்து மடல் - நிறைவுப் பகுதி

கவிதை பதிவு எண் 263105-ன் தொடர்ச்சி...

அறிவாளியாய் அழகாய்
ஈன்றெடுதீர்
ஆண் பிள்ளைகள் இரண்டு....!!

அழகான குடும்பம்
ஆலவிருட்சமாய்
இனி தழைக்கும்....!!

அப்பா... அம்மா பதவியில்
அன்பு தவறாதவர்கள்...

அண்ணன்... அண்ணி பதவியில்
கடமை தவறாதவர்கள்...!!

இனி வரும் காலங்களில்
தாத்தா... பாட்டி....
கொள்ளு தாத்தா... கொள்ளு பாட்டி....

இன்னும் பதவி உயர்வுகள்
கோலாகலமான வாழ்வினில்
குதூகலங்கள் நிறைவாய்....!!

இருபதுகளில்
பெரியோர்கள் நடத்தி வைக்க
இனிதான வைபோகம்
இளமை திருமணத்தில்....!!

இணைபிரியா தம்பதியராய்
வாழ்ந்த வாழ்க்கைதனை
அடையாளம் காட்டும் விழா
பிள்ளைகள் நடத்தி வைக்க

அறுபதாம் திருமணத்தை
கண்குளிர.... மனம் குளிர
கண்டு ரசிக்கின்றோம்....!!

நீண்ட ஆயுளுடன்
ஆரோக்கியமான வாழ்வில்
நீவீர் ஆனந்தமாய் வாழ
ஆண்டவன் அருள் புரிந்திடுவான்...!!

இணைந்தகரம் இணைந்தபடி
இன்னுமாய் திருமணங்கள்
எண்பதும் நூறும் காண
இறைவனின் ஆசிர்வாதங்கள்
என்றென்றும் உமக்குண்டு....!!

சீர்தூக்கி வாழ்ந்த வாழ்வில்
நீங்கள்தான் தெய்வங்கள் எமக்கு
எங்களையும் வாழ்த்திடுங்கள்
உங்களைப் போல் வாழ்ந்திடவே....

-நிறைவு பெற்றது-

எழுதியவர் : சொ.சாந்தி (2-Oct-15, 10:00 am)
பார்வை : 16273

மேலே