மேடை நாடகம் நடிப்பு
"ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்
இறைவனுக்கு வேடம் என்னவோ ?
ஆடவிட்டுப் பாடுவான் மூடுதிரை போடுவான்
மேடையவன் மேடை அல்லவோ
வாழ்க்கையின் பாதையவன் பாதையல்லவோ "
----கண்ணதாசனின் வழியினில்.....
உலகம் இறைவன் அமைத்த மேடை
வாழ்க்கை அவன் நித்தம் அரங்கேற்றும் நாடகம்
நாமெல்லாம் மேடையில் உலாவும் அவன் பாத்திரம்
திரையை மேலே உயர்த்துவான் வாழ்க்கை நாடகம் என்பான்
திரையை கீழே தாழ்த்துவான் மரணமெனும் முடிவென்று மணியடிப்பான்
ஜனன மரண நாடகத்தில் நாம் அன்றாட பாத்திரம்
அவனது முடிவில்லா இயக்கம் !
---கவின் சாரலன்