naatkaali
அதிகாரம் உள்ளவர்களுக்கே
நான் நாட் காலி
அதிகாரம் இல்லாதவர்கள்
என்னை பயன் படுத்த முடி யாது!
என்னெனில், நான் ஒரு
நாட் காலி!
எனக்கு நான்கு கால்கள்
உள்ளன! நடக்க அல்ல
இருக்க! என் மீது இருப்பவர்கள்
நல்லவர்கள் ஆகவும் இருக் கலாம்!
கெட்டவர்கள் ஆகவும் இருக் கலாம்!
நான் பார் ப்பதில்லை! - பேதம்
இருந்தும் - நான் மனம் உடைகின்றேன்
அழுகின்றேன் - என் மனமதை ஆற்ற
யார் முன் வருவார்? சொல்லுங்களேன்!