வட்டமடிக்கும் விழிநொடிகள்

வட்டமடிக்கும் விழிநொடிகள்
==============================


என் கனவுகளுக்குள் எதில் நீ இருகிறாய் சொல்
அலைகளால் பேசி
விழிகளால் விசாரித்துப்போ

மொட்டைப்பாறையில் வழுக்குமரம்
ஏறுவதைப்போல
மின்(னூக்கி)கலம் இல்லாத
வட்டமடிக்கும் உன் விழிநொடிகளுடன்
ஒரு வாழ்க்கை
வாழ்ந்துவிடலாம்போல் துடிக்கிறது இதயம்

சிராய்ப்புகளுக்குள் மறையும்
பச்சையத்தின் நெடிகளுக்குள்ளே
கோணமான குன்றுகளை
அமைத்துவிட்டாயடி ப்ரியத்தமா

வளையல்களின் முனங்கல்களையும்
சிரிப்பொலிகளையும்
சேலைக்காற்றுடனா உருளவிடுவது ம்ம்ம்ம்

இன்றைக்கெல்லாம்
எனைச்சுற்றிய உன் அன்பிற்கும்
வேகத்தடை வந்துவிட்டதாக உணர்கிறேன் ,,
சரிவா என் சலிப்புத்தீர ஒரு முத்தம் த்தா,, என்றால்,,
நல்லதாக நாலு வார்த்தை பேசு
என விலகுகிறாய்
நல்லதாய் நான்கு வார்த்தைகளுக்கு
நான் எங்குசெல்வேன் ம்ம்
காதலும் காமமுமாக
அன்பும் எல்லாமுமாகப் பெருகி
முப்பெரும் நதியாகி,,,
கடலில் சங்கமித்தப்பின்னால் ம்ம்ம்ம் ,,,

சரி வேண்டாம்
என் முத்தமிட்ட
நினைவுகளையேனும் திருப்பித்தா ,,, என்றால்
"உன் சுடுங்காற்றில் காய்ந்ததையும் ,,
என் வெறுங்காட்டில் உறைந்ததையும்
திருப்பிக்கேட்டால்,,, என்ன செய்வேன்,,,என்கிறாயா

இதோ வாங்கிக்கொள்,,,
இதையாவது கேட்கிறபோது திருப்பித்தா ம்ம்ம்

""ஒளிய இடமில்லாத
கண்ணாமூச்சிகளுக்குள் ஒளிந்து
கிளிஞ்சல்களின் மேலே
பெயர்க்கொத்திக் கொண்டிருந்தேன்
சுழலும் காந்த களத்தில்
ஒருசேராத துருவங்களை இணைத்து
பசையால் ஒட்டிவிட்டிருந்தாய்
உன் குலைக்குழியில் சறுக்கும் என் ஆகிருதியை
எதைக்கொண்டு
இழுக்கப்போகிறாயோ ம்ம்ம்
உன் மனக்கோட்டையின் காவல் அரக்கர்களிடம்
என் வரவினைப்பற்றி
ஒருவார்த்தை சொல்லிவிடு
ஏன் தெரியுமா ம்ம்ம்ம்
கடற்கரை மணற்வீட்டிற்கு மேலே
அலைகளின் அணைப்பு
அத்தனை இதமாக இருப்பதில்லை
நம் இருவரின் அணைப்பினைப்போல ம்ம்ம்"""


அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (2-Oct-15, 11:07 am)
பார்வை : 94

மேலே