ஒருதலைக் காதல் - 1

ஒருதலைக் காதல் - 1

காதல் ஒப்புகை கண்களில் சொட்ட
காதலி நெருங்கினாள் மெல்ல ...

கண்கள் தொடர கைகள் படர
கவிதை ஒன்று மலர்ந்தது!!!

இருவருக்கும் இருந்த நெருக்கம்
இடையில் செல்ல இடமின்றி
இடவலமாய் சென்றது காற்று !!!

விட்டு விட்டு துடித்த இதயம்
விடாது துடித்தது...
விட்டு விடாதே என்று...

விடவில்லை நானும்
விடை பெறவில்லை அவளும் ...

சற்று நேரத்தில் ...



இன்னுமா நீ முழிக்கல...
மணி ஆகுது பாரு...
சீக்கிரம் எழுந்திரி...

- ஒருதலைக் காதல்!!!

- பா.வெ.

எழுதியவர் : பா.வெங்கடேசன் (2-Oct-15, 3:42 pm)
பார்வை : 67

மேலே