நான் இதுவா - 3

கற்றதாலும் பெற்றதாலும்
வந்த அறிவு சொல்வதை
மனம் கேட்பதில்லை..
மனம் சொல்லும் எல்லாவற்றையும்
அறிவு ஏற்பதில்லை..
வெல்லும் அறிவோ..மனமோ
செயல்களை நிர்ணயம் செய்கிறது ..
பெரும்பாலும் வெல்லுவது
வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது..
இதில்..
"நான்" என்பது ..
அறிவு மயமா..
மனதின் வயமா ..
இரண்டுமில்லை ..
நான்..வேறு!