எங்கிருந்து வரும்

இப்பொழுது எழுந்திருக்கலாமா
இன்னும் கொஞ்சம் உறங்கலாமா
என்பது துவங்கி..
இப்பொழுது படுக்கலாமா..
கொஞ்ச நேரம் கழித்து படுக்கலாமா
என்பது வரை ..
ஒரு நாள் முழுதும் ..
செய்யும் ஒவ்வொரு செயலுக்கு முன்னும்
போராட்டம்...உற்றுப் பார்க்கையில்
நினைப்புக்கும் நிஜத்திற்கும்
வேறுபாடு காண ..
அனைத்திலும் மனதுக்குள் போராட்டம்..
இதில்..பழி என்னவோ..
வாழ்க்கையின் மீது..
போராட்டமான வாழ்க்கை என்று..
அசந்தால்..
மற்றவர் செயல்களால் போராடுகிறேன்
என்பதும் ..வாயில் வரும்..!
அப்புறம் ..
அமைதி எங்கிருந்து வரும்..?
..கருணா..
உன்னைத்தான் கேட்கிறேன் !

எழுதியவர் : கருணா (2-Oct-15, 4:23 pm)
Tanglish : engirunthu varum
பார்வை : 312

மேலே