வாயுள்ள பிள்ளை பிழைக்கும்

உறவுகள்,
வரங்கள் போல;
நன்மையும் பயக்கும்,
சுமையும் ஆகும்.
கவசகுண்டலம் போல
களைய முடியாதது.

கல்லும் கனியாகும்
முள்ளும் மலராகும்
காலம் பொன்னாகும்
நியதிகள் தான்
வாழ்வின் விதிகள்.

மழையும் வெயிலும்
மாறி மாறித்தான் வரும்,
மழையில் வெயில் வேண்டினால்
நடப்பது தான் நடக்கும்,
நினைப்பு கூட நிலைமையை கடிதாக்கும்,

எண்ணம் பேச்சு செயல்
எப்படி அமைகிறதோ
எவ்வழி செல்கிறதோ
அவ்விதமே வாழ்வு தொடரும்.

அதற்கு மனம் வசப்பட்டால்
நம்மை நாமே வெல்லலாம்,
நம்மை சேர்ந்தவரையும்
கடக்கலாம், கரை சேர்க்கலாம்.

எண்ணம் மனவலிமை
பேச்சு வாய்-மை
செயல் திறன்
கைவசமானால்
கவசமானால்
வாழ்வே வசப்படும்.

எழுதியவர் : செல்வமணி (3-Oct-15, 1:11 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 376

மேலே