நிராகரிப்பு

அனைத்திலும் கலந்த
அன்னையின் அன்பும்.,
கண்ணிமை போல் காக்கும்
தந்தையின் பாசமும் .,
என்னவென்று கேட்டவுடன்
கண்முன் நீட்டும் அண்ணனின் ஆதரவும்.,
முந்தானை பிடித்து விளையாடும்
பிள்ளையாய் சுற்றிவரும் தம்பியின் நேசமும் .,
தோன்றியதை பகிர்ந்து துவண்ட நேரம்
தோள் கொடுக்கும் தோழமையையும் .,
மிஞ்சிடும் சக்தி இருந்தால் வா
அப்பொழுது ஏற்றுக்கொள்கிறேன்
உன் காதலை..

எழுதியவர் : (3-Oct-15, 1:49 am)
Tanglish : niragarippu
பார்வை : 153

மேலே