rohini m - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : rohini m |
இடம் | : அம்பாசமுத்திரம் |
பிறந்த தேதி | : 18-Mar-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 22 |
வெகுநாட்களாக
புகைபிடித்தும் கூட
புற்றுநோயாளியாகாத
இரகசியத்தைக்
கூறிவிடு இரயிலே ...
அம்மாவின் அறுசுவை உணவுக்கு ஆறுதல் பரிசு,
அரை வயிற்று சோற்றுக்கு மூவாயிரம் ரூபாய்
ரொக்க பரிசு!
விடுதி மாணவர்கள்.
இரவின் நெற்றிப் பொட்டு நீ
ஒளிரும் பொன் விளக்கும் நீ
இரவின் மடியில் மலரும் நீ
குளிரும் இரவில் வெளிச்சம் நீ
வட்ட முகத்தின் அழகும் நீ
வளரும் வடிவின் முழுமை நீ
நிலவே தினமும் வந்திடுவாய்
வானை அழகு செய்திடுவாய்..!
அனைத்திலும் கலந்த
அன்னையின் அன்பும்.,
கண்ணிமை போல் காக்கும்
தந்தையின் பாசமும் .,
என்னவென்று கேட்டவுடன்
கண்முன் நீட்டும் அண்ணனின் ஆதரவும்.,
முந்தானை பிடித்து விளையாடும்
பிள்ளையாய் சுற்றிவரும் தம்பியின் நேசமும் .,
தோன்றியதை பகிர்ந்து துவண்ட நேரம்
தோள் கொடுக்கும் தோழமையையும் .,
மிஞ்சிடும் சக்தி இருந்தால் வா
அப்பொழுது ஏற்றுக்கொள்கிறேன்
உன் காதலை..
அனைத்திலும் கலந்த
அன்னையின் அன்பும்.,
கண்ணிமை போல் காக்கும்
தந்தையின் பாசமும் .,
என்னவென்று கேட்டவுடன்
கண்முன் நீட்டும் அண்ணனின் ஆதரவும்.,
முந்தானை பிடித்து விளையாடும்
பிள்ளையாய் சுற்றிவரும் தம்பியின் நேசமும் .,
தோன்றியதை பகிர்ந்து துவண்ட நேரம்
தோள் கொடுக்கும் தோழமையையும் .,
மிஞ்சிடும் சக்தி இருந்தால் வா
அப்பொழுது ஏற்றுக்கொள்கிறேன்
உன் காதலை..
இதுவரை இப்படி நிகழ்ந்ததில்லை
கண்டதும் காதலில் நம்பிக்கையில்லை
இருப்பினும் ஒவ்வொரு பார்வையிலும்
புதிதாய் தெரிந்தாய்
மயக்கும் விழியும் சிலிர்க்கும் தலையசைவும்
பார்பதற்கே நேரம் போதவில்லை
படைத்தவனுக்கு போதியதோ ?
அசைவுகள் கூட ஈர்த்தன உன்பக்கம்,
பெண்களை மிஞ்சிய கூந்தல்.,
எண்ணங்களை சிதறச்செய்யும்
வண்ணங்களின் மாயமென்ன ..!
ஆணினம் கர்வம் கொள்ளும் அழகு
உன்னிடம் உள்ளதில் பெருமையல்லவோ
மயிலே......!
நடுநிசியின் நாய்களாய் எண்ணம்
அங்கும் இங்கும் ஓடுகிறது ...
கட்டிவைக்க கயிறொன்று தேடுகிறேன்
கிடைக்கவில்லை ...
நடுநிசியின் நாய்களாய் எண்ணம்
அங்கும் இங்கும் ஓடுகிறது ...
கட்டிவைக்க கயிறொன்று தேடுகிறேன்
கிடைக்கவில்லை ...
வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~
நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;
பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !
* * *
சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?
உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !
* * *
மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..
என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !
* * *
காந்தம்
எங்கள்
கல்லூரி மரங்களின்
ஆயுள் ரகசியம் கேட்டேன்
ஒப்புக்கொண்டன
எங்களின் சிரிப்பொலியும்
பேச்சும் தான் என்று ...
மழை வந்து நாளாயிற்று
மண் மணம் வந்து நாளாயிற்று
பயிர் வளர்ந்து நாளாயிற்று
உழவன் வயிறு நிறைந்து நாளாயிற்று
பசுமை கண்டு நாளாயிற்று
பரிசல் கண்டு நாளாயிற்று
தவளைகள் சத்தம் கேட்கிறது
வருமோ மழை நாளை...