மயிலே

இதுவரை இப்படி நிகழ்ந்ததில்லை
கண்டதும் காதலில் நம்பிக்கையில்லை
இருப்பினும் ஒவ்வொரு பார்வையிலும்
புதிதாய் தெரிந்தாய்
மயக்கும் விழியும் சிலிர்க்கும் தலையசைவும்
பார்பதற்கே நேரம் போதவில்லை
படைத்தவனுக்கு போதியதோ ?
அசைவுகள் கூட ஈர்த்தன உன்பக்கம்,
பெண்களை மிஞ்சிய கூந்தல்.,
எண்ணங்களை சிதறச்செய்யும்
வண்ணங்களின் மாயமென்ன ..!
ஆணினம் கர்வம் கொள்ளும் அழகு
உன்னிடம் உள்ளதில் பெருமையல்லவோ
மயிலே......!

எழுதியவர் : ரோகினி (3-Oct-15, 1:08 am)
Tanglish : mayile
பார்வை : 71

மேலே