ஜனனம்
ஏதோ ஒரு மயக்கத்திலிருந்து விழித்தெழுந்தேன்.
என்னைச் சுற்றி விசித்திர உருவங்கள்.
யார் நீங்கள் ? நான் எங்கே இப்படி ?
என்ற என் கேள்விகளுக்கு,
இது எமலோகம் என்றார்கள்.
நான் இறந்து விட்டதாகவும்,செய்த பாவங்களுக்கு
நரகம் என்று தீர்ப்பளித்தார்கள்
கோபத்துடன் என்ன கணக்கு இது என்றேன்.
பறவைகள் வந்ததாம், மிருகங்கள் வந்ததாம்,
பசிக்கு உணவு தரவில்லையாம்
தாயை பார்க்கவில்லையாம்,
தகப்பனுக்கு சோறு போடவில்லையாம்,
அடுக்கினார்கள் ஆயிரத்தி எட்டு குற்றங்கள் என்மீது.
அரக்கர்கள் இருவர் என்னருகில் வந்தனர்.
ஒருவன் என் கைகளை பிடித்தான்
ஒருவன் என் கால்களை பிடித்தான்
பலவந்தமாக என்னை நரகத்திற்க்குள் போ
என வீசினார்கள்
அண்டவெளியில் பயணமானேன் நான்.
இறுதியில் ஏதோ சிவப்பான ஓர்
திரவக் குட்டைக்குள் விழுந்தேன்.
இதுதான் நரகமோ என நினைத்த வேளையில்
மீண்டும் தொடர்ந்தது சில விசித்திர நிகழ்வுகள்.
என்னைப்போலவே லட்சக்கணக்கில்
என்னோடு தத்தளித்தார்கள்.
ஏதோ இருவரின் முனகல் சத்தம்,
என் காதில் கேட்டது.
ஒரு சில நிமிடங்களில் ஒரு குடுவைக்குள் நுழைந்தேன்
என்னைப் போலவே ஆயிரக்கணக்கில் அதே குடுவைக்குள்.
இப்போது நாங்கள் வெண்மையாக
நிறம் மாறிப் போயிருந்ததோம்.
திடிரென்று நாங்கள் அனைவரும்
ஒரு குழாயின் வழியாக ஒரு பாதாளத்திற்க்குள்
வீசி எறியப்பட்டோம்.
போகும் வழியில் ஒரு கூட்டம்
எங்களை கொடூரமாக தாக்க துவங்கினார்கள்.
பெரிய போராட்டத்தில் அனைவருமே
மாண்டு போனார்கள் என்னைத் தவிர.
இறுதியாக ஒறு சிறிய குடுவைக்குள் ஐக்கியமானேன்.
அங்கே ஒருத்தி என்னை அன்போடு அணைத்துக் கொண்டாள்
இப்போது இருவரும் சேர்ந்து ஒன்றாகி கருவாகி போனோம்.
பத்து மாத இடைவெளிக்கு பின்
ஒரு புது ஜனனத்தின் மூலம்
மீண்டும் நரகத்தில் பிரவேசம் ஆனேன் நான்.