பொய் சொன்னால் நம்புவாயா
பொய் சொன்னால் நம்புவாயா
இல்லை
உண்மை சொன்னால் உள்ளம் ஏற்பாயா
உன்னை காணவரவில்லை என்று நீ முறைக்கிறாய்
கண்டதால்தான் வரவில்லை என உரைக்கிறேன்
வண்ணவண்ண சேலைக்கட்டி
என் வீடு அருகே வண்ணமயில் வந்தது
வந்தது நீ என பின் தொடர்ந்தேன்
தொட துணிந்தேன்
தொட்டபின் தான் வண்ணமயில் என உணர்ந்தேன்
அய்யோ
என் கண்மணியை காணவேண்டும் என கால் நடந்தேன்
தூரத்தில்
விட்டுவிட்டு எரியும் விளக்கு
அதன் அருகில் தெரிந்ததே உந்தன் முகம் எனக்கு
அருகில் சென்றவுடன் தெரிந்தது
அது பெண்ணிலா அல்ல
வெறும் வெண்ணிலா என்று
உடனே உள்ளம் வேர்ந்தது
உள்ளங்கை ரேகை உன்னை காண துடித்தது
மீண்டும் நடந்தேன்
செவிஓரம் உன் குரல் கேட்க
மெய்மறந்து நான் அதை கேட்க
உன் குரல்ஒலி சற்றுநேரம் ஒளிந்துக் கொண்டது
எங்கே என நான்தேட
சற்றுநேரத்தில் மீண்டும் புல்லாங்குழல் இசைப்பாட
அது உன் குரல் இல்லையென நான்வாட
மீண்டும் சாலைவழியே
நான் என் பயணத்தை தொடர
புல்வெளி மீது உன்னை காண
அருகில் சென்று நான் அமர
அருகில் சென்றதும் நீ துள்ளி ஓட
பின்
அனைவரும் சொல்ல
அது உன் காதலி அல்ல
கலைமான் என்று
இப்போது சொல் காரணம் நீயா நானா