தூய்மை இந்தியா

பாரத பிரதமரே !
"தூய்மை இந்தியா"
திட்டம்
கொண்டு வந்த
உங்களுக்கு
என் நன்றி...!

டெல்லியில்....,
அழகான மனிதர்கள்.. !
அலங்கோலமான
தார் சாலைகள்...!!

ஏராளம்
இங்கே
எச்சில் பட்டே
நனைந்த வீதிகள்...!

எச்சில் பட்டு....
சிகப்பு நிறமான
பல.. கருப்பு
தார் சாலைகள்.... !!

முதலில்....
சுத்தம்
செய்யவேண்டியது
எச்சில் துப்பும்
வாய்களையா?
அல்லது
வீதிகளையா?

குறைசொல்ல
வேண்டியது
வேர்களையா...?
அல்லது
விழுதுகளையா...?

இங்கே,
புகை விடுவதில்....
வாகனங்களை
மிஞ்சும் மனிதர்கள் ...!

வாகனங்களுக்கு
வந்தது
பாரத் III , IV , V
எமிஷன்
செக் செய்ய,
ஏகப்பட்ட
நடைமுறைகள்....!!

ஏனோ தெரியவில்லை
மனிதனுக்கு
எந்த
நடைமுறையுமில்லை.... !!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (5-Oct-15, 3:40 am)
Tanglish : Thuimai indiaa
பார்வை : 936

மேலே