இவரோடு வொருஜென்மம் வாராதோ

இவரோடு வொருஜென்மம் வாராதோ..!

மறந்து போனேனோ..? – உள்ளம்
மறுத்து போனேனோ
திருத்தமுடியா ஜென்மமதிலே-
திரும்பிவந்து பிறந்திடுவேனோ..?

துடிக்கும் இதயமதில் – நீ
துளைகள் போட்டாலும்
வெடிக்கும் எரிமலையாய்–
வேதனை ஏராளம்..!

கடிந்து போகையிலே – தினம்
கணமாய் காரணங்கள்
ரணமாய் துவைக்குதடி–
ரத்த நாளங்கள்..!

பொய்களின் போர்களத்தில் – நம்
புத்தியை அடகுவைத்து
சக்தியை மடக்கியவன்-
சக்கையாய் மிதிக்கின்றான் ..!

எதிர்க்கத் துணிவின்றி - ஏன்
எனும் கேள்வியின்றி
வயிற்றை நிரப்புகின்றோம்-
வேடிக்கை மானிடராய்..!

ஆட்சி கேட்கின்றான் , அவன்
அவனவன் சாதிக்கு
அரசியல் என்பதெல்லாம்-
அடியாள் வேலையென ...!

மனிதம் எனும்கருவை – இங்கு
மதியில் அழித்துவிட்டு
மதம்கொண்டு அலைகின்றான்-
மரண பீதியிலே..!

பாரதி கனவெல்லாம் – நான்
பார்க்க முடியாதோ
பெரியார் பேச்செல்லாம்-
பெண்ணுரிமை ஆகாதோ..!

கடந்து போனாலும் – என்
கண்ணே மறைந்தாலும்
துணிவே வாழ்க்கையென்று–
துணிந்த இக்கூட்டத்தில்...!

இனியொரு பிறவியிலே – நான்
இணைந்தே பிறந்துவிட
இறைவனை கேட்கின்றேன் – வரம்
இதுவே போதுமென..

என்று தணியும் இந்த தாகம்...!

எழுதியவர் : ராகிங் ஜாக் (4-Oct-15, 8:26 pm)
பார்வை : 95

மேலே