நீ ஒரு தேவதை...,
வாலிபச் சாலையில்
நீ
வலம் வந்த போது
வாகன விபத்துக்கள் அதிகமாயின
உன் அழகில் சுயமிழந்த
சிலர் வாழ்வு
மோகன சுகத்துக்குள்
மூழ்கிகிடந்தன
பலவீனமான இதயங்கள் பல
பாதியிலேயே நின்று போயின
சித்தப் பிரம்மை பிடித்தது போல
உன்னைப் பார்த்தக் கண்கள்
நிலை குத்தி நின்றன
தென்றலாய் வந்த நீ
வழக்கம்போல
ஒன்றும் அறியாதவளாய்
நீபாட்டுக்கு சென்றுவிட்டாய்
நீ
நடந்து சென்ற பாதையில்
சூறாவளியின்
கோரத் தாக்குதலில்
சுருண்டு விழுந்த அடையாளங்கள்
நிலைமையையுணர்ந்த காவல்துறை
நீண்ட ஆலோசனைக்குப்பின்
அவசர அவசரமாக
அறிவிப்புச் செய்தது
"இனி
தேவதைகள் யாரும்
தெருவில் நடக்கக் கூடாது" என்று!