குறும்பாக்கள்

" குறும்பாக்கள் "

மின்கம்பியில்
துடிக்கும் இதயம்
நூலறுந்த பட்டம்

வீட்டில்
கடல் அலை
சுவரில் ஓவியம்

மனிதநேயத்துக்கு எதிரி
ஜாதிமதத்துக்கு நண்பன்
'டாஸ்மாக் ' கடவுள்

நீல வண்ண வானமதில்
கறுப்புக் கதிரவன்
சூரிய கிரகணம்

பூத வான் உடம்பில்
ஆறாத நோய் வடுக்கள்
கிரக நட்சத்திரங்கள்

இரவில் நட்சத்திரக் காவலர்கள்
சூரியத் திருடனைத் தேடுகிறார்கள்
கடவுளின் வெற்றி

ஜாதிமதப் பூ சிரிப்பு
மனிதநேயப் பொக்குவாய்ச் சிரிப்பு
இரண்டுக்கும் பற்கள் இல்லை

சாலையில் ஓடிய மூஞ்சூறை
சாலையில் நடக்கும் ஆனை மிதித்து கொல்கிறது
பிள்ளையார் கடவுளின் வன்முறை

கடலில் அலை
உடலில் உயிர்
காதல்

பிரார்த்தனைகள் பலிக்கின்றன
மீன்கள் குளிக்கின்றன
கடலில் மழை

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (5-Oct-15, 9:38 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 65

மேலே