எல்லாம் இறைவன் செயல்
எல்லாம் இறைவன் செயல்
என சொல்லும் எம்மக்களே
இறைவன் செயல பாருங்க
இது நியாயமா கூறுங்க
வித விதச்ச ஆண்டவனே
அறுக்கும் நாள குறிக்கிறான்
வீண் வீண் உறவமைச்சி
பின்னவனே பிரிக்கிறான்
மன நிம்மதிய பறிக்கிறான்
மனித உணர்வ மிதிக்கிறான்
இறைவன் செயல பாருங்க
இது நியாயமா கூறுங்க
மத மதமா பிரிஞ்சி கடவுள்
மக்களையும் பிரிக்கிறான்
மனசாட்சிய இழந்து இங்கே
மத யுத்தங்கள் நடத்துறான்
எல்லாத்தையும் படைச்சியதில்
ஏற்றத்தாழ்வ அமைக்கிறான்
சமத்துவத்த தந்திடாம
சங்கடத்த வளக்குறான்
எல்லாம் இறைவன் செயல்
என சொல்லும் எம்மக்களே
இறைவன் செயல பாருங்க
இது நியாயமா கூறுங்க
ஆறறிவ மனுஷனுக்கு தந்தான்
அத ஆட்டிவைக்குற ஆளா
அவனே வந்தான்
அப்புறம் எதுக்கு
நம்பள அவன் படைக்கணும்
தேவையில்லாம ஆறறிவ
நமக்கெதுக்கு
கொடுக்கணும்
இன்னும் இதுபோல
எவ்வளவோ இருக்கு
அத சொன்னா
நீண்டு போகும்
நேரத்தோட கணக்கு
- ராஜ குமரன்