வணங்குதல் மரபின் நன்றே --- அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தரிசனம் கிடைக்கப் பெற்றேன் .
------ தவத்தினால் வந்தே நின்றேன் .
கரிசனம் மிகுந்து ஞானக்
------ கலைபலக் கற்றுத் தேர்ந்தேன் .
பரிசுகள் பலவும் வென்றேன் .
------ பரவசம் தன்னில் நானே
வரிசையில் நின்றே உன்னை
------- வணங்குதல் மரபின் நன்றே .
( விளம் + மா +தேமா
விளம் + மா + தேமா )