சதிகாரச் சமூகம்

என்ன செய்தேன் நான்
எண்ணங்களை எழுத்தாக்குவதைத் தவிற
என் அருமை சமூகத்திற்கு.....

கவலை கொண்டேன்
காரணங்களைத் தேடினேன்
சிந்தனைகளைச் சலித்தேன்.....

படித்த சமூகம் வேறு
கிடைத்த சமூகம் வேறு!!!
படைத்த சமூகம் யாரு?????....

வெருச்சோட வைத்து வீதியில்
வேல் கம்பு கொண்டு
வேட்டையனாய் ஆடுது....

சாமூக ஏழை என்னை
சாதியின் பெயர் பூண்டு
சாடித் துரத்துகிறது...

மதம் ஆராய்ந்து மனிதனில்
மனசு சேறாகிப்போன வெளிதனில்
மதயானையாய்ப் பிளிறுகிறது.....

பாலகன் மனம் தொடங்கி
பல் விழும் கிழம்வரை
பால்பிரித்து விரட்டுகிறது....

கருணைக் கண் பார்த்தும்
காமன் பேர் கொடுத்து
காவல்நிலையம் சேர்க்குது....

உடை தொடங்கி நடை
சடை தொடங்கி இடை
தடைச்சட்டம் இயற்றுது....

பணம் என்னும் வாளெடுத்து
குணம் கொண்ட கோமகன்களையும்
பிணமேடையேற்றி வெட்டுது....

விஷ வார்த்தை வீசியெரிந்து
விதியின் பெயரால் வீதியெங்கும்
வேதாளமரமேறி மிரட்டுது....

எழுத்தாய் எழுந்தாலும் ஏளனமாய்
அரசியல் சாயம் பூசி
எமனாய்ஏறி மிதிக்குது .....

தன் இனம் வதைந்தாலும்
தன் வளம் நினைந்து
தவறென்றெண்ணாமல் நகருது....

எங்கு சென்றாலும் தடை
எதைச்செய்தாலும் பீடை
எப்படிப்பங்களிப்பாயென இளிக்குது...

தாயின் மடியிருட்டெ மேல்
தவிடாகும்வரை தவித்து வாழும்
தரணி புகுவதை விட!!!!....

எழுதியவர் : க. நஞ்சப்பன் (5-Oct-15, 10:52 pm)
சேர்த்தது : நஞ்சப்பன்
பார்வை : 98

மேலே