பேய்கள் ஜாக்கிரதை

குயில் கூட வீடு சென்ற வேளையிலே
துயில் மறந்து நான் நடந்தேன் சாலையிலே
வானவில்லின் வண்ணம் போல
வகைவகையாய் எண்ணம் கொண்டு
நடுஇரவு நான் நடக்கும் போது
தெருவிளக்கும் விட்டு விட்டு ஜொலிக்கும்
தனியாக வரும் என்னை
சற்று பயமுறுத்த நினைக்கும்!!
என்முன்னே யாருமில்லை
கண் இமைக்க நேரமில்லை
தூரத்தில் அழுதிடும் நாய்கள்
தன் மொழியறியா என்னிடம்
ஏதேதோ சொல்ல குரைக்கும்
எனைச் சுற்றி நிற்கும் பேய்கள்
என் பயம் பார்த்து
வாய்விட்டுச் சிரிக்கும் !!
இதயம் படபடத்த நொடிகள்
மூளை செய்ததோ தன் வேலை !!
நில்லாமல் ஓடிவிட்டால்
நாளை பொழுதை நீ கண்டிடுவாய்
பேய் பார்த்து நின்றுவிட்டால்
புவி விட்டுச் சென்றிடுவாய்
என்ற மூளையை
மூலையில் வைத்து
என் பயத்தினை
அதன் கூரையில் வைத்து
தலைதரிக்க ஓடினேன்
சில சமயம்
தடுமாறி ஓடினேன்
இரண்டெட்டு நொடிகள்
ஓடிய பின்னால்
சற்று திரும்பினேன் பின்னால்
தூரத்தில் அழுத
நாய்களும் இல்லை
தொடர்ந்து துரத்திய
பேய்களும் இல்லை
பிழைத்தோம் உயிர்
என நடந்திட நினைத்தால்
என் பின்னே துரத்திய பேய்கள்
என் கண்முன்னே !!!

எழுதியவர் : நிரஞ்சன் (6-Oct-15, 8:43 am)
பார்வை : 65

மேலே