வாலிபம் வயோதிகம்

வாலிபம் விடை பெற்றுச்
சென்றுவிடும்
வயோதிகம் வந்து
தாலாட்டும்
வசந்தமும் தென்றலும்
ஏளனம் செய்யும்
வாசல் முல்லை
முகம் சுளிக்கும்
ஆகாயத்தைப் பார்த்து
அசந்து நிற்கத் தோன்றும்
மற்றவர்களுக்கு
கவிஞனுக்கு இல்லை !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Oct-15, 9:47 am)
பார்வை : 194

மேலே