குறும் பாக்கள் - 03

" குறும்பாக்கள் - 03 "

1. அர்த்தமே பாதியாய்ப் பிழை தான்
பாதி இரவு பாதி பகல்
முழுமையான ஒரு நாள்

2. மரணத்துக்கு உயிர் உண்டு
அது தான் இப்பொழுதாய் இயங்குகிறதே
அர்த்த தானம்.

3. உணர்வுக்குப் பிடித்த
ஒப்பற்ற ஒப்பனை
மவுனம்

4. பிறப்பு இறப்புக்குத் தான்
ஒளியும் ஒலியும் ஒழிகிறது
எரியும் தீக்குச்சி

5. கன்னங்களில் இருப்பது
காயம் அல்ல
கண்ணீர் வடுக்கள்

6. அழலும் வயிறில்
உழலும் இறை
பசி

7. கடவுளுக்கு கோபம்
தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்டார்
ஜாதிமதங்கள்

8. ஜாதிமதக் குரங்கு கையில்
மனிதநேயப் பூமாலை
கொடுத்தது எல்லாம் வல்ல இறைவன்

9. எல்லோருக்கும் பேய் பிடிக்கும்
ஐம்பெரும் பூதங்கள்
அர்த்த விஸ்வரூபங்கள்

10. அம்மா அப்பா என்ற
உயர்பதவி தந்த உயரதிகாரி
குழந்தை

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (7-Oct-15, 6:33 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 50

மேலே