மோடி பற்றி ரகுராம் ராஜன் அப்படி என்னதான் சொன்னார்

மோடி பற்றி ரகுராம் ராஜன்: அப்படி என்னதான் சொன்னார்?

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தான் இப்போதைய ஹாட் டாக். அவர் வட்டி விகிதத்தைக் குறைத்தாலும் குறைத்தார், அத்தனை பேரும் கொண்டாடி தள்ளுகிறார்கள். அவரோ மோடியைப் பற்றி கொஞ்சம் பேசியிருக்கிறார் என்னவென்றுதான் பாருங்களேன்.


"பிரதமர் மோடி இந்தியாவுக்கான பேச்சாளர்; நமக்கெல்லாம் முன்னே இருக்கிறார். ஆனால் அவருடைய வெளிநாட்டுப் பயணங்களில் சொல்வது போல் ஏதாவது உள்நாட்டில் சொல்லும்படி நடந்தால் பரவாயில்லை." இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

மோடியின் வெளிநாட்டு பயணங்களால் இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மாறி வருவது உண்மைதான். ஆனால் அவர் இந்தியாவுக்காகப் பேசும் பேச்சுக்களுக்கு முதலில் இந்தியா தயாராக இருக்கிறதா? இந்தியா அப்படி இப்படி என்று பேசி வருகிறார். அந்த வார்த்தைகளைக் காப்பாற்ற இந்தியாவில் செயல்பாடுகள் நடந்தாக வேண்டும். மோடி நமக்கெல்லாம் முன்னே போய்க்கொண்டிருக்கிறார், அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க இந்தியா தயாராக வேண்டும். இதுவே ரகுராம் ராஜன் கூறியது.

மேலும் ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையேயான உறவு வலுவடைந்திருக்கிறது ஆனால் நிதி அமைச்சர் சொல்லும் அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக்கொண்டு விட முடியாது என்றார்.

"அப்படி இல்லாவிட்டால், மக்கள் துயரத்திற்கு ஆளாக வேண்டிவரும். இந்திய மக்களின் நலனுக்காக சில விஷயங்களுக்கு 'நோ' சொல்லித்தான் ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார் ராஜன்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது - நாண (8-Oct-15, 9:17 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 179

மேலே