நேரம் இல்லை எனக்கு

நேரம் இல்லை!!! எனக்கு.... - கட்டுரை..
____________________________________

நேரம் இல்லை ! நேரம் இல்லை ! என்று கூறுபவரெல்லாம் உழைப்பாளியும் இல்லை... நேரம் ஒதுக்குபவரெல்லாம் வேலை அற்றவரும் அல்ல.....

இது உண்மை! ஒப்புக்கொள்ளவேண்டிய ஒன்று....

-----------

நேரம் என்பது இப்பூவுலகில் வாழும் அத்துணை ஜீவராசிகளுக்கும் ஒன்றுதான். ஒரு நாளின் நேர கணக்கு 24 மணிநேரம். இது எந்த வகையிலும் மாறாது ....

நேரம் இல்லை எனக்கு ! இப்ப முடியாது ! டைம் இல்லை ! அப்புறம் தான்! நான் ரொம்ப பிஸி ! எனக்கு வேலை இருக்கிற்து ! என்று கூறுபவர்களில் 10% தான் உண்மையில் வேலைப்பளுவின் நிமித்தமாகவோ அல்லது தவிர்கமுடியாத காரணத்தினாலோ சொல்பவர்கள்... மீதம் உள்ள 90% வாய் ஜாலம் தான்.... வேலை இருப்பது போல் நடிப்பதும் வேஷம் போடுவதிலும் கை தேர்ந்தவர்கள்..
இது இப்படி இருக்க....

சிலரை, தொலைபேசியில் அழைதால், " இப்ப நேரம் இல்லை,,, அப்புறம் கூப்பிடுகிறேன் " என்று கூறி உடனே தொடர்பை துண்டித்து விடுவர்.... நாம் என்ன காரணத்திற்காக தொடர்பு கொண்டோம் என்றபதில் அவர்களுக்கு அக்கறை இருந்ததில்லை... ஒன்று இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்..... உண்மையில் ஒருவர் வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு தவிர்கமுடியாத காரணத்தினாலோ அப்படி சொல்லிருந்தால் , கட்டாயம் அந்த நபர் தன வேலை முடிந்ததும் தன்னை தொடர்பு கொண்டவரை அழைத்து விவரத்தை தெரிந்து கொள்வர்ர்... இதில் ஐயம் இல்லை.... அனுபவம் பேசுகிறது....

மேலும், சில பெண்கள் நேரம் இல்லை என்று கூறுவார் புடவை கட்ட கூட.....

இது ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று... "ஐயோ ! இன்னிக்கு புடவையா? என்னால் முடியாது... அதற்காக நான் காலை சீக்கிரம் எழ வேண்டும்...வேண்டாம். மற்றொரு நாள் பார்க்கலாம்..." புடவை உடுத்த ஒரு சராசரி இந்திய பெண் நேரம் ஒதுக்கித்தான் செய்யவேண்டும் என்றால் நம் நிலைமை எங்கே என்று பாருங்கள்.... இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.. யார் ஒருவரையும் புண்படுத்த அல்ல...நம் தோற்றத்தை அழகு செய்ய நேரம் இல்லையா??? பின் எதற்கு நேரம்???

மற்றுமொரு திசையில் .... இந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளின் பெற்றோரின் அங்கலாய்ப்பு ...." அட எனக்கு நேரம் இல்லை !" "என் பெண்ணிற்கு கிளாஸ் இருக்கு நான் வரமுடியாது..!" "இப்பவா முடியவே முடியாது டைம் இல்லை... என் பெண் கூட உட்காரனும்" இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.. சொல்வது சரிதான்... ஆனால், இந்த அளவிற்கு மிகை படுத்துவது தேவை இல்லாத ஒன்று... எவர் ஒருவரையும் சுட்டிகாட்ட இதை பதிவு செய்யவில்லை....

உண்மை கூறப்போனால், நிறை குடம் ததும்பாது.. ஒருவர் வேலை காரணமாகவோ அல்லது சேவை செய்வதில் ஈடுபட்டவர்களோ இருப்பின் , அவர்கள் கூட நேரத்தை தனக்காகவும் , மற்றவர்க்காகவும் கட்டாயம் ஒதுக்குவார்கள்.... இது பொய் அல்ல மெய்..

இருக்கும் நேரத்தில் நம் வேலைகளை, கடமைகளை, விருப்பங்களை ..... எல்லாம் திறம்பட செய்து முடிப்போம்...

நலம் ! நலம்!

திருமதி. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : திருமதி. மைதிலி ராம்ஜி (8-Oct-15, 10:34 am)
பார்வை : 127

மேலே