நம் மனிதாபிமானமும்தான்

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்
லாவகமாக திருடுவது
நம் மனிதாபிமானமும்தான்

வசதிக்காக வனவிலங்குகளை
வேட்டையாடும் வக்கிர மனிதர்களிடம்
இல்லாதது
நம் மனிதாபிமானமும்தான்

வாக்குப்படி நடக்காத அரசியல்வாதிகளிடம்
செருப்படி வாங்குவது
நம் மனிதாபிமானமும்தான்

ஊரை ஏமாற்றி உலையில் போடும்
உண்மையற்ற ஊதாரிகளிடம்
உறங்குவது
நம் மனிதாபிமானமும்தான்

எழுதியவர் : வெங்கடேஷ் (8-Oct-15, 8:28 pm)
பார்வை : 134

மேலே